உறுப்புரிமை படிவம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்கள்.
விண்ணப்பப்படிவம் மற்றும் கடிதமாதிரி என்பவற்றை பூர்த்தி செய்தல்
விண்ணப்பப்படிவம் அறிவுறுத்தல்கள்.
அங்கத்துவப்படிவம்:
அங்கத்துவ படிவத்தினை பூர்த்தி செய்து ரூபா 100/=ஜ உறுப்புரிமைக் கட்டணமாக எமது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு அதன் ரசீதினை (Receipt) எமது முகவரிக்கு அனுப்பி வைத்தோ அல்லது எமது சங்க நிர்வாக உறுப்பினர் ஒருவரிடமோ ஒப்படைக்கலாம். உங்களுக்கான பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
சந்தா அறவீடு:
வழிமுறை 1.
நிறுவன அல்லது திணைக்கள தலைவருக்கான வேண்டுகைக் கடிதத்தைப் பூரணப்படுத்தி நிறுவன அல்லது திணைக்கள தலைவரிடம் ஒப்படைத்து ஒப்பம் பெற்று கணக்காளரிடம் சமர்ப்பிக்கவும். (முடியுமானவர்கள் அதன் பிரதியை விண்ணப்பப் படிவத்தோடு எமக்கு அனுப்பி வைக்கவும்.)
வழிமுறை 2.
எமது Northern Province Development Officers' Union எனும் பெயருடைய 82930941 இலக்க இலங்கை வங்கி கணக்கிற்கு தங்கள் வங்கி கணக்கிலிருந்து மாதாந்தம் சந்தாவை செலுத்துவதற்கான நிலையான வங்கிக் கட்டளையொன்றை (Standing Order) வழங்கவும் முடியும்.
வழிமுறை 3.
மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற முடியாதவர்கள் வருடாந்த சந்தாவான 600/= ரூபாவை எமது Northern Province Development officers' Union எனும் பெயருடைய 82930941 இலக்க இலங்கை வங்கி கணக்கிற்கு வைப்பிலிட்டு அதன் ரசீதினை (Receipt) எமது முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
குறிப்பு - சந்தா அறவீட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பு அடையாளமாக அவசியம் பயன்படுத்தவும்.
எமது சங்க முகவரி
செயலாளர்,
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்,
இல.59, சங்கிலியன் வீதி,
நல்லூர்.
Download As PDF: அங்கத்துவப் படிவம், சந்தாப் பண அறவீடு
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக