வெளிக்கள அலுவலர் வகுதிக்கு உரித்தான அரசாங்க சேவை மற்றும் மாகாண அரசாங்க சேவைக்குரித்தான பதவிகள்
வெளிக்களப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, 2017.12.07 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 33/2017 இன் இணைப்பு 01 அல்லது 02 இற்கான பதவிப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் கடமையாற்றும் சகல அலுவலர்களுக்கும், 2014.03.31 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2014, 2014.06.30 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2014(I) மற்றும் 2015.06.03 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2014(II) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் வெளிக்களக் கொடுப்பனவிற்கான உரித்துடைமை காணப்படுகின்றது.
02. சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் வெளிக்களக் கொடுப்பனவிற்கான உரித்துடமை காணப்படும் ஒருசில அலுவலர்களுக்கு அக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என குறிப்பிடப்படுவதனைக் கருத்திற் கொண்டு இச் சுற்றறிக்கைக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. யாரேனுமோர் அலுவலருக்கு அவ் வெளிக்களக் கொடுப்பனவு செலுத்தப்படுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை காணப்படுவதாயின் அது பற்றி தாபனப் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்து அவசியப்படும் தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக