எக்ஸாம் டென்ஷனை வெற்றி கொள்வது எவ்வாறு?

பரீட்சைகள் என்பவை கல்வியின் ஒரு முக்கிய பகுதியாகும். அதே வேளை பல மாணவர்களினதும் மன அழுத்திற்கு காரணமாக அமைவதும் இதுவே என்றால் அது மிகையாகாது.  எனவே இந்த தொல்லை தரும் பரீட்சை தொடர்பான டென்ஷனை இல்லாமல் செய்வதற்கும் அதனை சிறந்த முறையில் கையாள்வதற்கும் தெளிவான மனநிலையும் இவ்வாறான மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளினை எவ்வாறு சிறந்த முறையில் கையாளலாம் என்பது தொடர்பான புரிந்துகொள்ளலும் மிக மிக முக்கியமானதொன்றாகும். பல சந்தர்ப்பங்களில், எக்ஸாம் டென்ஷன் மனது முழுவதும் நிறைந்திருக்கும் வேளையில், எதிர்பார்க்கும் வெற்றியினை அடைந்து கொள்வதற்கு நெறிமுறைப்படுத்தப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட மனநிலை ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது. அந்த வகையில் அவ்வாறான ஒழுங்குபடுத்தப்பட்ட மனநிலைகளினை எவ்வாறு பரீட்சையினை எதிர்கொள்வதற்காக மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கப்போகின்றோம். 

பரீட்சைக்கு தயார்படுத்தும் போது....

பரீட்சையில் எவ்வாறான வினாக்கள் அல்லது விடயங்கள் வரக்கூடும் என நீங்கள் எதிர்பார்ப்பவற்றினை குறித்துக்கொள்ளுங்கள்.



உங்களது பரீட்சைக்கான பாடத்திட்டம் தொடர்பில் கலந்தாலோசிக்கவும் அல்லது உங்களது பரீட்சைக்கு எவ்வாறான பாடத்திட்டங்கள் பொருத்தமானவையாக இருக்கும் என உங்களது ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு உங்களது பரீட்சைக்கு வரக்கூடிய விடயங்கள் தொடர்பில் தெளிவான அறிவு அல்லது புரிந்து கொள்ளல் இருப்பின் அது உங்களது பரீட்சையின் போது குளப்பமற்ற தெளிவான நிலையொன்றினை ஏற்படுத்துவதுடன் அது பரீட்சைநிலையத்தில் உங்களது பரீட்சையினை நீங்கள் கையாளவும் இலகுவானதாக அமையலாம்.

  • உங்களுக்கு உங்களது பரீட்சைக்கு வரக்கூடிய நிலை தொடர்பில் தெளிவற்றதோர் நிலையிருப்பின் உங்களது ஆசிரியரிடம்  அது தொடர்பில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். ஏனெனில் உங்களது ஆசரியர் குறித்த பரீட்சை எதிர்பார்க்கை வினாக்கள் தொடர்பிலான தெளிவானதொரு புரிந்து கொள்ளலை கொண்டிருப்பதுடன் சிறந்த விடைகளினை குறித்த வினாக்களுக்காக வழங்கக்கூடிய ஆளுமையினைக் கொண்டிருப்பார்.
  • பாடத்திட்டம் தொடர்பில் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அது தொடர்பில் உங்களது நண்பரிடமோ அல்லது ஆசிரியரிடமோ கலந்துரையாட முன்பு உங்களது சந்தேகங்களை ஒழுங்குபடுத்தப்பட்டமுறையில் குறித்துக் கொண்டு அதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பிலான தெளிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்ளுங்கள். எழுமாற்றான திட்டமிடப்படாத கலந்துரையாடல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். அவை பயனற்று போவதுடன் உங்களுக்கும் தெளிவற்ற நிலையினை அதிகரிக்க வாய்ப்புண்டு. 
பரீட்சை மண்டப விதிகள் மற்றும் அமைப்புக்களுக்கு ஏற்ற வகையில் உங்களது கற்றலை மேற்கொள்ளுங்கள்.



உளவியலில் சூழல் சார் நினைவகம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. அதாவது பரீட்சை தொடர்பானஎமது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு பரீட்சை நிலையம் போன்றதொரு சூழ்நிலையில் கற்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது எமது ஆழ்மனதில் அல்லது மூளையில் குறியாக்கப்பட் நிலையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆனவை குறித்த குறியாகப்பட சூழலை ஒத்த சூழலில் விரைவாக மீட்ப்படும் அல்லது நினைவுக்கு வரும். அதே போல உளவியலில் குறிப்பிடப்படும் இன்னொரு கொள்கையான மனநிலை சார் நினைவகக் கொள்கையானது எந்த மனநிலையில் நாம் கற்றோமோ அதே மனநிலையில் தகவல்கள் விரைவாக நினைவுக்கு கொண்டு வரப்படும் எனக் குறிப்பிடுகின்றது.

  • உதாரணமாக, பரீட்சை மண்டபமானது மிகவும் அமைதியான ஒன்றாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒன்றாகவும் காணப்படும். அதே சூழலை ஏற்படுத்தி நீங்கள் கற்றிலை மேற்கொள்ளும் போது அது பரீட்சையினை எதிர்கொள்ளும் போது விரைவாக தகவல்களை நினைவுக்கு கொண்டுவர உதவும். இது உளவியலில் சூழல் சார் நினைவகம் தொடர்பில் உங்களுக்கான நன்மைகளினை ஏற்படுத்தும்.
  • மனநிலை சார் நினைவகத்திற்கு உதாரணமாக, நீங்கள் தேநீரை அருந்தி விட்டு பரீட்சைக்கு தயார்செய்வீர்களேயானால் பரீட்சை தினமன்றும் ஒரு தேநீரை பருகிவிட்டு பரீட்சை எழுதும் போது அதிக நினைவாற்றல் காணப்படும். 

மேற்கூறிய இரண்டு விடயங்களினையும் உங்களது கடந்தகால பரீட்சை அனுபவங்களுடன் ஒப்பிட்டு நோக்கி உங்களது மனதினை டென்ஷன் அற்ற முறையில் எவ்வாறு தயார்படுத்தலாம் என ஒழுங்குபடுத்திக்கொள்வதன் மூலம் எக்ஸாம் டென்ஷனை குறைத்துக் கொள்ளலாம்.

குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்



வகுப்பறையில் குறிப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது நினைவாற்றலையோ அல்லது பாடப்புத்தகத்தையோ மட்டும் நம்ப வேண்டாம். வகுப்பறையில் ஆசிரியர் சொல்வதை செவிமடுப்பதிலும் குறிப்பெடுப்பதிலும் அவற்றைத் தொகுப்பதிலும் உங்களது கவனத்தினை செலுத்துங்கள். இவ்வாறு செய்வதன் ஊடாக நீங்கள் குறிப்பெடுத்தவற்றை மீட்டுப்பார்க்க முடியும். இது விடயங்களை மீட்டுப்பார்க்க உதவும். அத்துடன் நீங்கள் வகுப்பறையில் குறிப்பெடுக்காது விடின் நீங்கள் உங்களது புத்தகத்தில் உள்ள அனைத்தினை கற்பதில் கவனத்தினை செலுத்த நேரிடும்.

  • நீங்கள் குறிப்பெடுக்கும் போது முக்கிய சொற்களின் அல்லது கருப்பொருள்களின் கீழே கோடு போடுவது ஆகியவை சொல்வதினை அப்படியே எழுதுவதனை விட சிறந்த பலனை உங்களுக்குத் தரும். சொல்வதனை அப்படியே எழுதுவதனை விட அதில் உள்ள பிரதான கருப்பொருளை அல்லது கருத்தை புரிந்து கொள்வதே சிறந்ததாகும். 
  • நீங்கள் குறிப்பெடுத்தவற்றினை ஒவ்வொரு வாரமும் மீட்டுப்பாருங்கள். இது நீங்கள் குறித்த விடயத்தினை கற்றுக்கொள்ள உதவுவதுடன் குறித்த விடயத்தினை உங்களது மூளையின் குறுங்கால ஞாபகத்தில் இருந்து நீண்டகால ஞாபகத்திற்கு மாற்றுவதற்கு உதவும். இவ்வாறு செய்வதனூடாக பரீட்சை நேரம் வரும் போது நீங்கள் உங்களை சிறந்த முறையில் தயார்படுத்தியதாக உணாவீர்கள்.
உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கவும்.


பரீட்சையின் கடைசி நேரத்தில் விடயங்களை திணிக்க முற்படாதீர்கள். அது நிச்சயமாக உங்களை எக்ஸாம் டென்ஷனை நோக்கி இட்டுச்செல்லும். உங்களது கற்றல் நேரத்தினை பிரித்துக் கொள்ளுங்கள். அது மணித்தியாலங்களாகவோ அல்லது நாளாகவோ அல்லது வாரமாகவோ இருக்கலாம். இவ்வாறு நேரத்தினை பிரித்து கற்றுக் கொள்வதன் ஊடாக உங்களது நினைவாற்றலை அதிகரிப்பதனுடன் அது மேலதிக தகவல்களையும் பெற உதவும்.


  • சாத்தியமெனில் உளவியலின் சூழல் சார் நினைவகக் கொள்கைக்கு அமைவாக பரீட்சை மண்டபத்தில் குறித்த விடயத்திற்கு ஒதுக்கபட்ட நேரத்தினையே நீங்களும் ஒதுக்கிக்கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் போட்டிப்பரீட்சை ஒன்றிற்கு தயார் செய்பவர் எனின் பொது அறிவு எனும் விடயத்தினைக் கற்றுக் கொள்ள ஒரு மணித்தியாலத்தினை ஒதுக்கிக் கொண்டு கற்றலினை பயிற்சி செய்வது அதிக பயன் தரலாம். 
எங்கே கற்பது சிறந்தது அல்லது உங்களுக்குப் பொருத்தமானது என்பதனை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.



கற்றலுக்கான இடத்தினை தேர்வு செய்யும் போது எவ்வகையான காரணிகள் நீங்கள் பரீட்சைக்கான கற்றலை மேற்கொள்வதற்கு பொருத்தமானவாறும் வசதியாகவும் ஓய்வானதாகவும் இருப்பதற்கு வழிசெய்யும் என்பது தொடர்பில் சிந்திக்கவும்.

  • அறையின் ஒளியினை தேவைக்கேற்றவாறும் வசதிக்கேற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு அதிக வெளிச்சமுள்ள இடத்திலும் சிலருக்கு வெளிச்சம் குறைந்த இடத்தில் கற்பதும் வசதியானதாக இருக்கலாம்.
  • தினமும் நீங்கள் கற்கும் இடம் இரைச்சலுடன் காணப்படுகின்றதா அல்லது மிகவும் தூய்மையாக இருக்கின்றதா என உங்களது கற்றலுக்கான இடத்தினை ஆராயவும். அமைதியான இடம் கற்றலுக்கு உகந்தது. ஆனால் சிலர் இரைச்சலினையும் விரும்பலாம். எது உங்களுக்குப் பொருத்தமானது என்பதனை தீர்மானிக்கவும்.
  • பின்னணி சத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும். அதாவது பின்னணி இசை உங்களை கற்றலில் கவனத்தை செலுத்த உதவுமா அல்லது அமைதியான சூழ்நிலை கற்றலுக்கு உதவுமா எனத் தீர்மானிக்கவும்.
  • மாற்றீடான இடம் ஒன்றை தேர்வு செய்யவும். அது நூலகமாகவோ அல்லது பொருத்தமான உங்களுக்கு பிடித்த இடமாகவோ இருக்கலாம். புதிய கற்றலுக்கான இடம் உங்களுக்கு புத்துணர்ச்சியுடன் கூடிய கற்றலுக்கு உதவுவதுடன் மேலதிக கற்றலுக்கான வளங்களை தருவதாகவும் இருக்கலாம். உதாரணமாக: நூலகம்

நன்றி.

கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.