வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டத் தீர்மானங்களும் அவை தொடர்பான முன்னேற்றங்களும்.
மேற்படி விடயம் தொடர்பாக, 16.02.2019 அன்று இடம்பெற்ற எமது 2019 ஆம் ஆண்டுக்கான வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க பொதுச்சபைக் கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனைகளாக அல்லது சவால்களாக,
01. வெளிமாவட்டத்தில் கடமைபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் கடந்த 07 வருடங்களுக்கு மேலாகியும் வழங்கப்படாமை.
02. அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தரப்படுத்தப்பட்ட திணைக்கள ரீதியான கடமைப் பட்டியல் இன்மை ஆகிய முன்வைக்கப்பட்டன.
அந்த வகையில் கடந்த புதன்கிழமை 20.02.2019 அன்று யாழ்மாவட்ட உள்ளக இடமாற்றம் தொடர்பாக 'இடமாற்ற சபை' அரச அதிபர் தலைமையில் கூடிய போது அதில் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் சார்பில் பிரதான நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு குறித்த இட மாற்ற சபை மிகவும் நேர்மையான முறையிலும், வினைத்திறனாகவும் நடந்தது. இதன் போது யாழ் மாவட்ட அரச அதிபரிடம் யாழ் மாவட்டத்தில் இருந்து சென்று வெளி மாவட்டத்தில் பணி புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மிக நீண்ட காலம் இட மாற்றம் வழங்கப்படாமை தொடர்பில் மாவட்ட அரச அதிபர்களிடையே கலந்துரயாடி ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்ட போது அரச அதிபர் வெளிமாவட்ட உத்தியோகத்தர்களின் நிலை தொடர்பாக அதிக கரிசனையை வெளிப்படுத்தினார். அத்துடன் மாவட்ட ரீதியிலான இடமாற்றம் என்பது தன்னுடைய கைகளில் இல்லை என்றும் தான் இங்கிருப்பவர்களை அனுப்ப தாயார் என்றும், வெளிமாவட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் நிலைகண்டு தான் அதிக கவலை கொள்வதாகவும் கூறினார்.
அந்த வகையில் பொதுச்சபைக் கூட்டத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் எமது நிர்வாகக் குழுவானது வெளிமாவட்டத்தில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இட மாற்றம் தொடர்பில் அனைத்து வட மாகாணத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்களுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களது உள்ளக இடமாற்றம் தொடர்பான அவசர வேண்டுகோளினை முன்வைத்து 20.02.2019 அன்று கடிதங்களை அனுப்பியுள்ளது. அக் கடிதங்களின் பிரதிகள் அனைவரது பார்வைக்காகவும் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும் வட மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சாவால்கள் தொடர்பில் கலந்துரையாடவும், ஆலாசனை மற்றும் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளவும் எமது கௌரவ வட மாகாண ஆளுனர் அவர்களினை சந்திப்பதற்கான அனுமதி கோரியும் 18.02.2019 அன்று கௌரவ வட மாகாண ஆளுனர் அவர்களுக்கு எம்மால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதியும் அனைவரது பார்வைக்காகவும் இங்கு தரவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இவைதொடர்பான முன்னேற்றங்களை எமது இணையத்தளத்தினூடாகவும் (https://douninp.blogspot.com) சமூக வலைத்தளமான (https://www.facebook.com/douionnp) எனும் எமது முகப்பக்கத்தினை பார்வையிடுவதன் ஊடாகவும் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக