பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி பதிற்கடமைகளினை மேற்கொள்வதில்லை!வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தீர்மானம்!


01.07.2019 திகதியிலிருந்து  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி பதிற்கடமைகளினை மேற்கொள்வதில்லை என்று வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது சகோதர அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமான அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி மற்றும் உரியவர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானம் தொடர்பான தகவல் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் கடந்த  (29.06.2019) இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலிற்கு அமைவாக வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் இத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக அனைத்து அலுவலகங்களுக்கும் இத் தீர்மானம் தொடர்பான கடிதம்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாரும் பதிற்கடமைகளில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அவ்வாறு யாராவது பதிற்கடமையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தினால் அது தொடர்பில் எமக்கு அறியத் தரவும்.
இது தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பிலும் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் உரிய நடவடிக்கைகளினையும் பூரண பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ளும்.
எமக்கான உரிமைகள் உங்கள் ஒத்துழைப்பு இன்றி பெற முடியாது. எனவே அனைவரும் தயவுசெய்து ஒற்றுமையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முறைப்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு தொடர்பு கொள்ளவும்: 077-3760039





கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.