23.09.2019 ஆந் திகதிய ஒரு நாள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தல்!



வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் செப்டம்பர்-23 இல் ஒருநாள் சுகவீன லீவு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் 
23.09.2019 ஆந் திகதிய ஒரு நாள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தல்
நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் படியாக ரூபா 50,000/= இனை வழங்குவதற்கு 24.09.2019 ஆந் திகதியில் அமைச்சரவை அனுமதி வழங்கப்படவுள்ளது, அரச சேவையில் பல்வேறு சேவைகளில் உள்ள அலுவலர்கள் பணிபுரிகின்ற போதிலும் குறிப்பிட்ட சில சேவையாளர்களின் கோரிக்கைகள் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவது அனைவரும் அறிந்த விடயமாகும்.
நிறைவேற்றுதர சேவைக்கு மேற்படி படியை வழங்கும் போது ஏனைய சேவைகளின் சம்பளத்தில் பாரிய முரண்பாடுகள் ஏற்படவுள்ளது. இதனால் ஏனைய சேவையாளருக்கும் பொருத்தமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படாதவிடத்து  அநீதி இழைக்கப்படவுள்ளது.
இந்த அநீதிக்கு எதிராக எதிர்வரும் 23.09.2019 ஆந் திகதி திங்கட்கிழமையன்று ஒரு நாள் சுகவீன லீவை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பல்வேறு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கங்கள், அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர் சங்கம், இணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, கிராம உத்தியோகத்தர் சங்கம், இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு உத்தியோகத்தர்கள் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை முன்னேற்ற ஆசிரியர் சங்கம் உட்பட்ட 19க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள்   கூட்டாக இணைந்துள்ளன.இத்  தொழிற்சங்க நடவடிக்கைக்கு  வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் தனது பூரண ஆதரவினை  தெரிவிப்பதுடன் அனைத்து அபிவிருத்தி  உத்தியோகத்தர்களும் 23.09.2019 ஆந் திகதி திங்கட்கிழமை அன்று ஒரு நாள் சுகவீன விடுமுறையை அறிவித்து ஒத்துழைப்பு வழங்கி  எமது பலத்தை வெளிக்கொணர்வதற்கு ஒன்றிணையுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.
 வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் எதிர்வரும் 23.09.2019 (எதிர்வரும் திங்கட்கிழமை) அன்று இடம்பெறும் அரச உத்தியோகத்தர்களின் ஒன்றிணைந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவினை வழங்கி நிற்கின்றோம். எனவே வட மாகாணத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் மாகாண சேவையினைச் சேர்ந்த அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - பயிலுனர் தரத்தினைச் அனைத்து உத்தியோகத்தர்களையும் இப் போராட்டம் பூரண வெற்றி பெற முழுமையான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


நன்றி

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்.


கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.