வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கான அறிவிப்பு!

 நாளைய தினம் (19.10.2020) எமது தொழிற்சங்கத்தால் வடமாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

https://www.facebook.com/douionnp/videos/1051271768644670/

கடந்தவாரம் கர்ப்பவதியாக காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டும், மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தியும், ஏலவே வடமாகாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் இடமாற்றம் தொடர்பான பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வினை பெறவுமே இப்போராட்டம் முன்னெடுக்க படுகின்றது.

எந்தவொரு தொழிற்சங்கத்தினது உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களது ஆதரவை வெளிக்காட்டும் விதமாக நாளை காலை (19.10.2020) சுகயீன விடுமுறையை உங்கள் திணைக்கள தலைவருக்கு தந்தி மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் அறிவியுங்கள்.

உங்களின் அவ்வறிவிப்பு எவ்விதத்திலும் சட்ட மீறலாக அமையாது என்பதையும், அது உங்களின் தொழிற்சங்க நடவடிக்கை சார்ந்த உரிமை என்பதையும், அதை மனிதாபிமானம் மிக்க எந்தவொரு திணைக்கள தலைவரும் புரிந்துகொள்வர் என்பதையும் தயவுடன் நினைவிற்கொள்ளுங்கள்.

இவ்விடயம் தொடர்பாக யாருக்கேனும் சந்தேகங்கள் காணப்படின் கடிதத்தலைப்பில் உள்ள தொலைபேசி இலக்கதிற்கு அல்லது எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளவும்.




கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.